Thursday, February 16, 2012

குறள் 1092:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

கொள்ளை கொள்ளும் உன் அரை கணப் பார்வை
பேரின்பத்தின் அரையினும் மேல்...
குறள் 1091:
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

உன் பார்வை தரும் நோய்க்கு உன் பார்வையே மருந்து.


குறள் 1090:
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
உண்டாலே மயக்கமூட்டும் மதுவைப்போல் அல்லாது
உன்னை கண்ண்டாலே மயக்கமூட்டுவது காதல்..



குறள் 1089:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

 ஏணி விழியாள், வெட்கத்தை அணிந்தவளுக்கு
அணி என்ன அழகு சேர்க்கும்..??



குறள் 1088:
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

வெற்றி பல தேடித்தந்த என் வீரம் மிளிரும் அவள்
நெற்றிக்கு முன் தோற்று நிற்கிறது


குறள் 1087:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

மதகரியின் முகபடாம்-மங்கையின் கொங்கைமேல் துகில்



குறள் 1086:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
வளைந்த புருவங்களை நேராக்கி நின் விழியம்ம்புகளிடம் இருந்து என்னை காப்பாயாக